தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன ?
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன ?
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பரவுவதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூருகையில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார். மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல் முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு 2வது முறையாக அரசுப் பயிற்சி வழங்காது என்று அவர் கூறினார்.