நாகப்பட்டினத்தில் ஒரு லட்சம் பனை விதைகளை நட துவங்கிய ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை.!

நாகப்பட்டினத்தில் ஒரு லட்சம் பனை விதைகளை நட துவங்கிய ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை.!

Update: 2020-10-20 15:39 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் கற்று தந்த பாடங்கள் ஏராளம், அதில் முக்கியமான ஒன்று பனை மரங்களின் தேவை. இதனை கருத்தில் கொண்ட நாகப்பட்டினம் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை அமைப்பு அதற்கான பெரும் முயற்சியில் இறங்கியது. கடந்த இரண்டு மாத காலமாக தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, இடங்களை தேர்வு செய்து, பனை விதைகளை ஏற்பாடு செய்து அதனை சரியான நேரத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்தி அசத்தியுள்ளனர் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை'யை சேர்ந்தவர்கள். இதன் பலனாகஒரு லட்சம் பனை விதை நடவு திருவிழா நடைபெற்றது.

இதில் முதல் கட்டமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்காலடி கிராமத்தில் ஐந்தாயிரம் பனை விதைகளை நடவு செய்தனர் அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட பனை விதை நடவு திருவிழா நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் 10000 பனை விதைகளை நடவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியை நாகப்பட்டினம் மாவட்ட வன மற்றும் உயிரின காப்பாளர் திரு.கலாநிதி IFS அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக RG தமிழரசி (ஒன்றிய பெருந்தலைவர்), மாசிலாமணி ஒன்றிய கவுன்சிர், G.செல்வராஜ் ஊ ம தலைவர், V செல்வராஜ் BDO-தலைஞாயிறு ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியியை நாகப்பட்டினம் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் G.ராஜசரவணன், அறங்காவலர்கள் V.லெட்சுமணன், VR கர்த்திக், ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பின் தலைவர் RG மகேந்திரன், ஒருங்கிணைபாளர்கள் திரு. மாரியப்பன், திரு. பண்டரிநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள் மேலும் இந்நிகழ்வில் பொது மக்களுக்கு பனை மரத்தை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப் பட்டது

திரு.கலாநிதி IFS அவர்கள் காடுகளை பற்றியும் வன உயிரினங்களின் பாதுகாப்பு பற்றியும் அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

Similar News