கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான சீரம் கணக்கெடுப்புகள் மதுரையில் தொடக்கம்!
கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான சீரம் கணக்கெடுப்புகள் மதுரையில் தொடக்கம்!
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கணக்கிட்டு அதற்கான சீரோ கணக்கெடுப்பின் ஒரு பகுதியான மாதிரிகளைச் சேமிக்கும் நடவடிக்கை மதுரையில் திங்கட்கிழமை அன்று தொடங்கியது.
மதுரை மாவட்டத்தில் மாநில சுகாதார அமைப்பால் கண்டெடுக்கப்பட்ட 38 தொகுதிகளில் இருந்து இந்த மாதிரிகள் சேமிக்கப்படுகின்றன. அந்த மாதிரிகள் மொத்தம் 1,140 வீடுகளில் இருந்து சேமிக்கப்பட உள்ளன. மதுரை சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் Dr KV அர்ஜுன் குமார் 38 தொகுதிகளிலிருந்து 30 மாதிரிகள் சேகரிக்க உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
"இந்த 38 தொகுதிகளில், 20 கிராமப்புறங்களில் சேருகின்றன, 18 மாநகராட்சியைச் சேருகின்றது. ஒருநாளைக்கு மூன்று தொகுதிகள் கவரப்படும் அதில் மொத்தம் முப்பது மாதிரிகள் சேமிக்கப்படும். இந்த நடவடிக்கையானது நவம்பர் 11 வரை தொடரும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்த சீரம் கணக்கெடுப்புகள் ஒரு தனிநபரின் இரத்த சீரம்மை பரிசோதனை செய்வதன் மூலம் அதில் இருக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான ஆன்டிபாடி உள்ளதா என்று கண்டறியப்படும். இந்த சேகரிப்புகள் செமிலுமுமின்சென்ஸ் இம்யூனோஅஸ்ஸே(CLIA) சோதனைக்கு உட்படுத்த படுகின்றன. இதன்மூலம் அதில் கதிர்விச்சியின் வெளிச்சத்தின் மூலம் இரத்தத்தில் SARS CoV-2 வைரஸ்க்கு எதிரான ஆன்டிபாடி உள்ளதா என்று கண்டறியப்படுகின்றது. சமயநல்லூர் சுகாதார மையத்தில் CLIA கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்குச் சேமிக்கப்படும் சேகரிப்புகள் செயல்படுத்தப் படுகின்றன.