நீட் தேர்வு குறித்து தமிழக அமைச்சர் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு.!
நீட் தேர்வு குறித்து தமிழக அமைச்சர் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு.!
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு. இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான அனைத்து கல்லூரிகளில் சேர்க்கையை நிர்ணயிக்கிறது.
நீட் தேர்வு குறித்து பல சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருக்கிறது. கிராம புற மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் நீட் தேர்வு பற்றி சில அரசியல் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த வருடத்தின் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 57% மாக இருந்தது.
இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வெழுதி டாக்டர் ஆகலாம் என்று உளுந்தூர்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், 80,000 ஸ்மார்ட் போர்டுகளை கொண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும், தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.