ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக நவீனமயமாகும் சென்னை காவல்துறை.!
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக நவீனமயமாகும் சென்னை காவல்துறை.!
1659 இல் சென்னை மதராஸ் பட்டணம் என்று மீனவ கிராமாமாக இருந்த காலகட்டத்தில் பெட்ட நாய்க் என்பவரால் ஊழியர்களைக் கொண்டு நகரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட குழு தான் நாளடைவில் பல அரசாங்கங்களின் உதவியோடு சென்னை மாநகர காவல் என்று மாறியது.
சென்னை மாநகர காவல் குழுவில் ஒரு லட்சம் காவல் பணியாளர்கள் உள்ளனர். பல நவீன இயந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு சென்னை மாநகரை பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவிலேயே சென்னை பாதுகாப்பான நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் காவல் துறையினை நவீன மயமாக்கும் திட்டத்தின் படி, அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்டு 7 மாடி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமையவுள்ள இந்த கட்டிடத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான வகையில் இந்த கட்டுப்பாட்டு அறை இருக்கும் என காவல்துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.