"நட்பாசை பிடித்த ஸ்டாலினின் தப்பாட்டம் இனி மக்களிடம் எடுபடாது" ஸ்டாலினை தோலுரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"நட்பாசை பிடித்த ஸ்டாலினின் தப்பாட்டம் இனி மக்களிடம் எடுபடாது" ஸ்டாலினை தோலுரித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியது, "அதிமுக கூட்டணி வலுவான மெகா கூட்டணி. 2021-லும் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். தமிழகம், முதல்வர் எடப்பாடி கையிலும், இந்தியா பிரதமர் பாதுகாப்பாக உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதில் எதிர்கட்சிகளுக்கு எந்த பங்கும் சுத்தமாக இல்லை. இதில் ஸ்டாலின் உரிமை கோர முடியாது. ஸ்டாலினின் தப்பாட்டம் இனி மக்களிடம் எடுபடாது. தேர்தல் நேரம் என்பதால் எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் என ஸ்டாலின் கூறுகிறார். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். எப்படியும் முதல்வராகிவிடலாம் என்ற அவரது நப்பாசை பலிக்காது" என்றார்.
மேலும் திருமாவளவன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "மனு தர்மத்தில் பெண்களை பற்றி அவதூறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
ரஜினியில் அரசியல் பற்றிய கேள்விக்கு பேசிய அவர், "ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், கடந்த பல வருடங்களாக தமிழக மக்களுடன் ரஜினி வாழ்ந்து வருகிறார். தமிழக மக்களையும் ரஜினிகாந்த் அவர்களையும் பிரித்து பார்க்க முடியாது" என்று பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், "திராவிடம் ஆரியம் என்று பிரித்துப் பேசுவது தவறு. அண்ணாவே ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்று தான் கூறினார். எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார். ஜெயலலிதா 10 ஆயிரம் கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தியவர். நாங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எனவே ஆரியம், திராவிடம் என்று பிரிக்க வேண்டாம். பா.ஜ.க'வினர் தங்கள் செல்வாக்கை வளர்க்க இந்துத்துவா கொள்கையை கொஞ்சம் அழுத்தமாக கூறுவார்கள்" என்று பேசினார்.