நட்சத்திர விடுதியில் பீர் வாங்கி தர சொல்லி தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா அடிதடி கலாட்டா.!

நட்சத்திர விடுதியில் பீர் வாங்கி தர சொல்லி தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா அடிதடி கலாட்டா.!

Update: 2020-11-01 21:31 GMT

தி.மு.க எம்.பி சிவா'வின் மகன் சூர்யா நட்சத்திர ஹோட்டலில் பீர் வாங்கி தர சொல்லி பிரச்சனை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க எம்.பி'யின் வாரிசு என்ற ஆணவத்தில் பார்க் ஹோட்டலில் கலாட்டா செய்துள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா தனது நண்பரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக நான்கு நண்பர்களோடு நேற்றிரவு சென்னை அண்ணா சாலையிலுள்ள பார்க் ஹோட்டலுக்கு வந்துள்ளார். பின்னர்

அங்கு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி முடித்துவிட்டு மதுபோதையில் பார்க் நட்சத்திர விடுதியின் வாசலில் நண்பர்களோடு பேசிக்கொண்டுந்தபோது, தனது முன்னாள் நண்பரான பஜாஜ் நிறுவனத்தின் மண்டல மேலாளராக உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரைப் பார்த்துள்ளார். அதன்பின் அவரிடம் பேசிவிட்டு 4 பீர் ஆர்டர் செய்யும்படி தி.மு.க எம்.பி சிவாவின் மகன் சூர்யா கேட்டுள்ளார். ஸ்ரீராமும் 4 பீர்களை ஆர்டர் செய்து பில் கொடுப்பதற்காக ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார்.

ஆனால், வங்கியின் பணம் எடுக்கும் மிஷினில் சிக்னல் இல்லாததால் அதிலிருந்து பார்க் ஹோட்டல் ஊழியரால் பணத்தை எடுக்கமுடியவில்லை. இதனால் ஊழியர் பணத்தை எடுக்க முடியவில்லை எனக்கூற, தி.மு.க எம்.பி சிவாவின் மகன் சூர்யாவும் அவரது நண்பர்களும் பணம் இல்லாத கார்டை கொடுத்து எங்களை நக்கல் செய்கிறாயா என ஸ்ரீராமிடம் தகராறு செய்துள்ளனர்.

இந்த வாக்குவாதத்தால் ஸ்ரீராமுக்கும், தி.மு.க எம்.பி சிவா'வின் மகன் சூர்யா மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதில் ஸ்ரீராமை தாக்குவதற்காக சூர்யாவும் அவரது நண்பர்களும் பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு துரத்த, ஸ்ரீராம் ஹோட்டலுக்குள் சென்று 100-க்கு கால் செய்துள்ளார். அப்பொழுதும் விடாத சூர்யா அவரது காரை ஹோட்டலின் முன் நிறுத்தி யாரும் உள்ளேயும் வெளியேயும் செல்லாதபடி கலாட்டா செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தி.மு.க'வின் தொண்டர்கள், தி.மு.க'வின் கட்சி தலைவர்களின் வாரிசுகளால் ரோட்டோர டீக்கடை முதல் நட்சத்திர ஹோட்டல் வரை ரவுடியிசம் தலைவிரித்தாடுகிறது.

Similar News