உயிரியல் பூங்காக்கள் திறக்க - வனத்துறையினர் ஆர்வம்.!
உயிரியல் பூங்காக்கள் திறக்க - வனத்துறையினர் ஆர்வம்.!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, வனத்துறை உயிரியல் பூங்காக்களை திறக்கும் பணிகளை முழுவதுமாக கொரோனா தொற்று முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, சேலம், வேலுார், திருச்சி விலங்கு காட்சி சாலைகள் உள்ளன. இவற்றில், விலங்குகளை நேரில் காண, பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பு ஊரடங்கால், உயிரியல் பூங்காக்களுக்கு, பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அவற்றில் உட்புற பராமரிப்பு பணிகள் மட்டும் நடந்து வந்தன. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், உயிரியல் பூங்காக்களில் பார்வையாளர்களை, வரும் 10ம் தேதி முதல் அனுமதிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள், உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்த கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மற்றும் பூங்காக்களில் சுற்றி கிருமிநாசினி ஒவ்வொரு முறையும் பார்வையாளர்கள் வந்து போகும் பொழுது கட்டாயம் கிருமிநாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்தபிறகு, அடுத்தகட்ட பார்வையாளர்களை பூங்காக்கள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது என்னவென்றால், அரசு உத்தரவுப்படி, கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, உயிரியல் பூங்காக்களில் பார்வையாளர்களை அனுமதிக்க, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதியவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இருக்காது. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக, பார்வையாளர்களை அனுமதிக்க, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.