வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலின் நடுங்குகிறார்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.!
வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலின் நடுங்குகிறார்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.!
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வேல் யாத்திரை புறப்பட்டு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் " தமிழக பாஜக சார்பில் வரும் 6- ம்தேதி காலை 10 மணியளவில் திருத்தணியில் இருந்து புறப்படும் வெற்றி வேல் யாத்திரை அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் செல்லவுள்ளது. இறுதியாக டிசம்பர் 6-ல் திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது,
இந்த யாத்திரையில் பாஜக தேசீய நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், முக்கிய மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் தேசீய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதே யாத்திரையின் நோக்கமாகும். இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை உருவாக்கும், ரஜினிகாந்த் மிகப்பெரிய தேசீயவாதி, ஆன்மீகவாதி அவருடைய அரசியல் வருகையை பாஜக எப்போதும் வரவேற்கும்..
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி வழங்குகிறார், எளிமையானவராகவும், மக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் உள்ளார். கொரோனாப் பேரிடரை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது, தமிழகத்தின் தற்போதைய சூழலில் 3- வது அணி அமைய வாய்ப்பு இல்லை எங்கள் யாத்திரையைக் கண்டு, ஸ்டாலின் நடுக்கத்துடன் உள்ளார். யாத்திரையை எதிர்ப்போர், கலவரம் உண்டாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழக காவல் துறை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பா.ஜ.க, என்றைக்கும் பிரச்னை ஏற்படுத்தியது இல்லை. பா.ஜ.க, தொண்டர்கள் ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள். யாத்திரையின் போது லட்சக்கணக்கானோர் பா.ஜ.க,வில் இணைய உள்ளனர். இவ்வாறு தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல். முருகன் அவர்கள் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.