பெரியார் பேருந்து நிலையத்தில் அடித்துக்கொண்ட மாணவிகளுக்கு திடீர் சிக்கல்!

Update: 2022-05-03 04:00 GMT

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்து ஏறுவதற்காக வந்திருந்தனர். அப்போது திடீரென்று மாணவிகள், ஒருவருக்கு ஒருவர் சராமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அடிதடியில் ஈடுபட்ட மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முன்னிலையில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் சுமாமிநாதன், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழுவினரும் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

மேலும், அடிதடியில் ஈடுபட்ட மாணவிகளின் பெண்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். அது தவிர அரசு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதுவரையில் சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், தேர்வுக்கு பெற்றோருடன் மட்டுமே வரவேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினர். இதனால் மாணவிகள் தங்களது பெற்றோர்களை கட்டாயம் பள்ளிக்கு அழைத்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News