சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தாம்பரத்தில் பதிவான அதிகபட்ச மழை!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2021-11-11 11:24 GMT

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று சென்னை நகரில் விடிய, விடிய கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மணி நேரத்தில் 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு தென்கிழக்கில் 130 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 150 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது.

மேலும், சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மரம் முறிந்து விழுகிறது. இதனால் பெரும்பாலன இடங்களில் மின்சாரம் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் பதிவாகியுள்ள மழை அளவில், தாம்பரம் 232.9, சோழவரம் 220.0, எண்ணூர் 205.0, கும்மிடிப்பூண்டி 184.0, செங்குன்றம் 180.0, மீனம்பாக்கம் 158.5, விமான நிலையம் 116.0 என்ற மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 232.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News