தேர்தலுக்கு பின்னர் தலைமைச்செயலகத்தில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
மீண்டும் கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பன்மடங்கு உயர்ந்தது. தமிழகம் முழுவதும் தினமும் 400 முதல் 450 வரை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், (நேற்று) 6,618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதுமான அளவிற்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், அனைத்து பொதுமக்களும் மறக்காமல் அருகில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர், தமிழக அரசு பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தொற்று பரவலை குறைத்தது.
தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. அது மட்டுமின்றி மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
இதனிடையே மீண்டும் கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பன்மடங்கு உயர்ந்தது. தமிழகம் முழுவதும் தினமும் 400 முதல் 450 வரை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், (நேற்று) 6,618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகளவு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் 80,284 படுக்கை வசதிகள் உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 6,997 படுக்கைகளும், 6,517 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது.
தற்போது தொற்றால் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள் வருகின்ற 2 வாரங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவதற்கு ஊழியர்கள் அதிகளவு ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.