குடலிறக்கம் அறுவை சிகிச்சை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்கம் பிரச்சனை காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்கம் பிரச்சனை காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது முதலமைச்சர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.