முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவையின் முதல் கூட்டம்.!
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுஊரடங்கு உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுஊரடங்கு உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை கடந்த 7ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டது.
இதன் பின்னர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை எப்படி சரிசெய்வது போன்றவற்றை கலந்தாலோசிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது புதிய முதலமைச்சருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.