கோவை கார் வெடிப்பு சம்பவம் - நெல்லை மதகுரு வரை துருவி எடுக்கும் என்.ஐ.ஏ!

Update: 2022-10-28 05:37 GMT

கார் வெடிப்பு வழக்கு 

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. காரில் இருந்த ஜமேஷா முபீன் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடி மருந்துகள் எடுக்கப்பட்டது.ஜமேஷா முபீனின் கூட்டாளிகள ஆறு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. 

என்ஐஏ விசாரணை 

என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சார இயக்க நிர்வாகி முகமது காதர் மன்பை, மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் மன்பை ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முகமது உசேன் மண்பை ஏற்கனவே கோவையில் மத குருவாக இருந்துள்ளார்.

நெல்லையில் சோதனை 

நெல்லையில் வெடிகுண்டு பிரிவு காவல்துறை நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர். பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த இருசக்கர வாகனங்களில் மர்ம பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து வெடிகுண்டு கண்டறியும் கருவியை கொண்டு சோதனை செய்தனர்.

Input From: ETV

Similar News