பொதுவெளியில் வாக்காளர்களுக்கு அச்சமின்றி பணப் பட்டுவாடா செய்யும் தி.மு.க'வினர்!
கோயம்புத்தூர் மாநகராட்சியில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் பெற, எந்த ஒரு அச்சமுமின்றி தி.மு.க'வினர் பொதுவெளியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நேற்று முதல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தி.மு.க'விற்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதால், அக்கட்சியினர் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். ஆகையால் ஆளும் கட்சியினர் தேர்தல் விதிமீறல்களில் இறங்கிவிட்டனர்.
இதன் வரிசையில், கோயம்புத்தூர் மாநகராட்சி 95'வது வார்டில், தி.மு.க வேட்பாளர், பொதுவெளியில் பந்தல் போட்டு வாக்காளர்களை திரட்டி, எந்த ஒரு அச்சமுமின்றி வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப்பொருட்களும் விநியோகம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட தி.மு.க வேட்பாளர் மீது தேர்தல் விதி மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.