கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு.. முதலமைச்சர் துவக்கி வைப்பு.!

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு.. முதலமைச்சர் துவக்கி வைப்பு.!;

Update: 2021-02-08 16:05 GMT

கோவை அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்டுவதற்கு ரூ.110 கோடியில் புதிய கட்டுமான பணிக்கான பூமி பூஜையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த மக்களும் அதிகளவு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு கட்ட முடிவு செய்தது தமிழக அரசு. இதற்காக பழைய கட்டிடங்களை இடிக்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடத்திற்கு இன்று பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.110 கோடி என்று கூறப்பட்டுள்ளது.
 

Similar News