கோவை: முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மற்றும் கேரள எல்லைப்பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
அந்த வகையில், கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி, 14 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மற்றும் கேரள எல்லைப்பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.