கோவையில் பரபரப்பு: பட்டப்பகலில் பள்ளியில் புகுந்து ஆசிரியையிடம் 10 சவரன் நகை பறிப்பு!

கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மகனை சேர்ப்பது போன்று நடித்து ஆசிரியையிடம் இருந்து 10.5 சவரன் தங்க நகையினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-30 10:17 GMT

கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மகனை சேர்ப்பது போன்று நடித்து ஆசிரியையிடம் இருந்து 10.5 சவரன் தங்க நகையினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சித்தாப்புதூர் வி.கே.கே. மேனன் சாலை வெங்கடசாமி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பூண்டி. இவரது மனைவி அன்புக்கரசி. இவர் சின்னசாமி சாலையில் உள்ள ஆச்சார்யா என்ற தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அன்புகரசி பள்ளியில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகனை பள்ளியில் சேர்க்க என்னென்ன ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆசிரியை அன்புக்கரசி மாணவரை சேர்பதற்கான நடைமுறைகளை விளக்கியுள்ளார். அப்போது திடீரென் தான் வைத்திருந்த கத்தியை ஆசிரியை கழுத்தில் வைத்து நகைகளை கழட்ட சொல்லியுள்ளார். இதனால் பயந்த ஆசிரியை அன்புக்கரசி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி திருடனிடம் கொடுத்துள்ளார். இதனை வாங்கிக்கொண்ட திருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக ஆசிரியை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க, அவர்கள் காந்திபுரம் காட்டூர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu


Tags:    

Similar News