கோவை: 46 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று! கூடுதல் கட்டுப்பாடு விதித்த மாவட்ட நிர்வாகம் !

முதலில் கோவை, சரவணம்பட்டி நர்சிங் கல்லூரியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில் 46 பேருக்கு தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

Update: 2021-09-16 04:26 GMT

கோனை, சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளை சேர்ந்த 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

முதலில் கோவை, சரவணம்பட்டி நர்சிங் கல்லூரியை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில் 46 பேருக்கு தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன் மாணவ, மாணவிகளுக்க கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 20ம் தேதி முதல் அனைத்து மால்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும்.

ஓட்டல்கள், பேக்கரிகள் ஞாயிற்றுகிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி. உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News