கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலம் - நீதிமன்றத்தின் தொடர் கேள்விகள்?
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலத்தை பயன்படுத்த 30 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுவதாக அறநிலையத்துறை முடிவு.;
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்காக வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த அரசனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பொழுது நிலம் காலவரம்பு இல்லாமல் குத்தகைக்கு விடப்படுகிறது? இந்த உத்தரவின் பெயரில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் இடையிலான செய்து கொள்ளும் ஒப்பந்த பத்திரம் மீது துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு வாடைக்கு விடப்படும். மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டும். இந்த வாடகை தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். நிலத்தை வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை அடங்கிய பத்திரம் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இவற்றை படித்து பார்த்த நீதிபதிகள் பதிவு பதிவு துறைக்கு இது முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Input & Image courtesy: Dinamalar