தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி கொலை! ஒருதலைக் காதலால் விபரீதம்!

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-23 12:24 GMT
தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி கொலை! ஒருதலைக் காதலால் விபரீதம்!

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவியை ராமச்சந்திரன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த இரண்டு பேரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்வேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்பதும், வாலிபர் ஒருதலைக்காதல் செய்ததாகவும் முதற்கட்டமாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News