இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு.!
இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு.!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனையடுத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த போதிலும், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் முடிக்கப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றது.
பின்னர் நவர்பர் 12ம் தேதி கல்லூரிகள் திறக்க அரசு அனுமதித்த போதிலும், கொரோனா சூழலை கருதி முடிவு வைவிடப்பட்டது. இந்நிலையில், ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் இன்று முதல் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதித்துள்ளது.
தனிநபர் இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு 7ம் தேதி முதல் நேரடி வகுப்பு நடத்தப்படவுள்ளது.