நீலகிரி மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு.. மாணவ, மாணவிகள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் பயன்படுத்த அறிவுரை.!

நீலகிரி மாவட்டத்தில் கல்லூரிகள் திறப்பு.. மாணவ, மாணவிகள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் பயன்படுத்த அறிவுரை.!

Update: 2020-12-07 10:58 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து மாணவ, மாணவிகள் இன்று முதல் கல்லூரிக்கு வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க இன்று திறக்கப்பட்டது. இதில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் நடைபெற்று வருகிறது. இதில் குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதிகள் தயார் நிலையில் இருந்தபோதும் ஒரு மாணவியர்கள் கூட விடுதியில் தங்க வரவில்லை என்று கூறப்படுகிறது.


பெற்றோர்கள் மாணவர்களை விடுதியில் தங்கி படிப்பதற்கு அச்சப்படுகின்றனர். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. இது தொடர்பாக குன்னூர் பிராவிடன்ஸ்   கல்லூரியின் முதல்வர் சிஸ்டர் ஷீலா விடம் கேட்டபோது:

விடுதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மாணவர்களை வகுப்புகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர வைத்துள்ளோம். மேலும் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வந்துள்ளனர்.

அனைத்து வகுப்பு அறையிலும் சானிடைசர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சானிடைசர் பயன்படுத்த மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News