தருமபுரி: சூர்யா, ஜோதிகாவுக்கு எதிராக காவல் நிலையங்களில் குவியும் புகார்கள்!

தருமபுரி மாவட்டத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மீது மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அடுக்கடுக்கான புகார்களை பாமக அளித்து வருகிறது.

Update: 2021-11-16 10:37 GMT

தருமபுரி மாவட்டத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மீது மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அடுக்கடுக்கான புகார்களை பாமக அளித்து வருகிறது.


சமீபத்தில் ஞானவேல் தயாரிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளது. உண்மைக்கு புரம்பான கதைகளை எடுத்திருப்பதாகவும் குறிப்பாக வன்னியர்களின் குறியீடான அக்னி கலசத்தை மிகவும் இழிவுப்படுத்தியதாகம் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.


இதற்கு எதிராக பாமக உட்பட பல கட்சிகளில் இருக்கும் வன்னியர்களும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்தனர். இதனால் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளியுங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கு பதில் அளிக்காமல் சூர்யா தேவையில்லாத கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பின்னர் தமிழகத்தில் வன்னியர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில், நடிகர் சூர்யா, ஜோதிகா, ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் உடனடியாக வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஜெய்பீம் படக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாமகவினர் புகார்களை அளித்து வருகின்றனர்.

அதில் தருமபுரி காவல் கண்காணிப்பாளரிடம் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி தலைமையிலான குழுவினர் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். அதன் பின்னர் இண்டூர் காவல் நிலையத்தில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையிலான குழுவினர் புகார் மனு அளித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மணி, சிலம்பரசன்,சக்தி, முன்னாள் கவுன்சிலர் முருகன், சின்னசாமி, இராஜசேகர், பெரியண்ணன், சிவாஜி, பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மேலும், தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் புகார் மனு அளிக்கப்பட்டது. இதே போன்று மாவட்டத்தில் பிற காவல் நிலையங்களிலும் அடுக்கடுக்கான புகார்கள் குவியத் தொடங்கியுள்ளது. இந்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாமக நிர்வாகிகள் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News