முழுஊரடங்கு எதிரொலி.. வெறிச்சோடிய திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வீதி.!
தமிழகம் முழுவதும் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் ஒரு சாலை என்று சொல்லலாம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் இன்று முழுஊரடங்கு என்பதால் திருப்பரங்குன்றம் கோவில் வீதி முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நாளையும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.