செம்மண் சாலைதான் போட முடியும் - வத்தலகுண்டு பகுதியில் மக்களிடம் திமிராக கூறும் அதிகாரிகள்
சாலைகளின் சீரமைப்பதாக கூறி செம்மண் சாலைகளை போட்டதற்கு மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதிகள் கடந்து சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக இங்குள்ள சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சுற்றுலா தலங்களில் ஒன்றான மதுரை - கொடைக்கானல் முக்கிய சாலையாகவும், திண்டுக்கல்-குமிலி தேசிய நெடுஞ்சாலை ஆக உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று சாலை தற்போது செய்தமடைந்துள்ளது. செய்தமடைந்த சாலைகளால் பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்ற வருகின்றன.
இந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறை இடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாலிகை சீரமைக்க வந்து நெடுஞ்சாலை ஊழியர்கள் ஒரு தள்ளு வண்டியில் செம்மண் எடுத்து வந்து சாலையில் உள்ள பள்ளங்களில் போட்டு சீரமைத்தார்கள். அந்த ஊழியர்கள் ஜல்லித்தார் கலவை கொண்டு வந்தா தார் சாலை போடுவோம், செம்மண் தான் தற்போது இருக்கின்றது. இதன் காரணமாக செம்மண் சாலை போடப்படுகின்றது என்று அசால்டாக பதில் கூறினார்கள். இதனால் அங்கிருந்து வாகன ஓட்டிகளும் மக்களும் சிரமத்திற்காக ஆளாகி வருகிறார்கள்.
இப்படியும் தற்போதைக்கு போடப்பட்டுள்ள சாலை ஆனது அடுத்த மழைக்காலங்களில் மிகவும் சேரும், சகதியுமாக காட்சி தரும். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள சாலை காரணமாக மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். மேல் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நலமே கருத்தில் கொண்டு செயல்படுமாறும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
Input & Image courtesy: News