ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்.!
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் பூட்டப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் பூட்டப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது பற்றிய கருத்துக் கேட்பு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.