பள்ளி மாணவர்களுக்கான சத்துணவில் அழுகிய முட்டை! புழு பிடித்த உணவை சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவதா?

பள்ளி மாணவர்களுக்கு கெட்டு போன முட்டைகள் விநியோகம்

Update: 2021-10-28 08:26 GMT

திருப்பூர் மாவட்டம் 18வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி இயங்காததால், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அக்டோபர் 26ஆம் தேதி சத்துணவு அமைப்பாளர் முட்டை வினியோகம் செய்துள்ளார்.

அக்டோபர் மாதத்திற்கான 10 முட்டைகள், எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முட்டைகள் கெட்டுப் போய் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

முட்டை அழுகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவற்றை குப்பையில் வீசினர். இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பிலிருந்து மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனுவில், வாவிபாளையம் துவக்கப்பள்ளியில், குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய முட்டைகள் அழுகிய நிலையிலும், புழுக்கள் பிடித்த நிலையிலும் இருந்துள்ளது.

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையறிந்த, மாநகராட்சி சுகாதார துறையினர்,  பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.




Tags:    

Similar News