நெல்லையில் தொடர் மழை.. கரும்பு விற்பனை பாதிப்பால் வியாபாரிகள் கவலை.!

நெல்லையில் தொடர் மழை.. கரும்பு விற்பனை பாதிப்பால் வியாபாரிகள் கவலை.!

Update: 2021-01-11 13:16 GMT

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கரும்பு மற்றும் பிற வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக பொங்கல் திருவிழா கொண்டாடப்படும். வருடம்தோறும் வெகு விமர்ச்சியாக பொதுமக்களால் கொண்டாடப்படும் இத்திருவிழாவானது வருகின்ற வியாழக்கிழமை (14ம் தேதி) வர உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முதன்மையாக வைத்து படைக்க உதவுவது கரும்பு ஆகும். இந்த கரும்பு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக நெல்லைக்கு வியாபாரிகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துள்ளனர். நெல்லை மாவாட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கருப்பை விற்பனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்படுகிறது.

இதனால் பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கரும்பு, மஞ்சள், பனைகிழங்கு போன்ற பொருட்கள் விற்பனை ஆகாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மழை நின்ற பின்னர்தான் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்குமோ என்றும் விவசாயிகள் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளது.

Similar News