சேலத்தில் 3 நாட்களாக செவிலியர்கள் போராட்டம்: கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு முழக்கம்!

செவிலியர்கள் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

Update: 2023-01-05 04:04 GMT

தமிழகத்தில் தொற்று நோய் பரவல களத்தில் போது நியமிக்கப்பட்ட ஒப்பந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட செவிலியர்கள் நிரந்தர பணி வழங்க கோரி சேலத்தில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் போது அரசு மருத்துவமனைகளில் உகந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 2000க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன பணி நிறைவு செய்ய வேண்டும். அதாவது ஒப்பந்தம் முடிவடைகிறது. பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடந்த ஒன்றாம் தேதி முதல் சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். முதல் நாளில் ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு இருவோடு இரவாக போலீஸ்காரர்கள் அவர்களை கைது செய்தது. மறுநாள் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டத்தில் கலந்து இருக்கிறார்கள்.


தற்போது மூன்றாவது நாளாக போராட்டத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். மண்டபத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட செவிலியர்கள் சேலம் அரச மருத்துவம் கல்லூரி மருத்துவமனை பின்புற வாசலில் அருகே சாலையோரம் அமர்ந்து கடும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக கண்களில் கருப்பு துணி கட்டி நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பெரும் சர்ச்சையில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News