6 அடி இடைவெளியில் இருந்தாலும் காற்றில் கொரோனா வைரஸ் பரவும்.. மீண்டும் அதிர்ச்சியான தகவல்.!
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் 6 அடி தூரத்தில் இருந்தாலும், காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் 6 அடி தூரத்தில் இருந்தாலும், காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கம் அளித்துள்ளது.
இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் 6 அடி தூரத்தில் இருந்தாலும், காற்று மூலமாக கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் அதிகமாகவே உள்ளது.
மேலும், போதிய காற்றோட்டம் மற்றும் காற்று வெளியேறும் வழிகளற்ற மூடப்பட்ட இடங்களில் இந்த அபாயம் அதிகமாகவே இருப்பதாகவே தெரியவந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் பேசினாலும், அல்லது சுவாச மற்றும் வியர்வை திரவங்கள் வழியாகவும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.