அம்மாபேட்டை பள்ளி மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா.!

தஞ்சையில் உள்ள அம்மாபேட்டையில் 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தநிலையில், தற்போது பெற்றோருக்கும் தொற்று பரவியுள்ளது.

Update: 2021-03-16 03:31 GMT

தஞ்சையில் உள்ள அம்மாபேட்டையில் 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தநிலையில், தற்போது பெற்றோருக்கும் தொற்று பரவியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டு படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளில கல்லூரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது.




 


இதனால் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு சில மாதங்களாக வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இதனிடையே 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனிடையே 9 மற்றும் 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறைக்கப்பட்டது. இதன் பின்னர் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.




 


இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 5 பெற்றோருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News