கொரோனா அதிகரிப்பு: ஏப்ரல் 10 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு.!

பெரும்பாலாவோர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை.

Update: 2021-04-08 12:03 GMT

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பாக பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதில் பெரும்பாலாவோர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியது. தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.




 


இந்நிலையில், தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி:

திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தடை விதிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.

கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.


 



அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.

பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News