தமிழகத்தில் வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.!
தமிழகத்தில் வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.!;
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே 600க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், இன்று புதிதாக 477 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 503 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போன்று உயிரிழப்புகளும் குறைந்து வருகிறது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடித்து கொரோனா இல்லா தமிழகமாக மாற்ற அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.