கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.. தமிழக அரசை பாராட்டிய ஆளுநர்.!

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.. தமிழக அரசை பாராட்டிய ஆளுநர்.!

Update: 2021-02-02 14:19 GMT

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்தி கூட்டத்தை தொடங்கி வைப்பார். அதே போன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்து தமிழக அரசை பாராட்டி உரை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது ஆளுநர் உரை நிகழ்த்திய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியினர் வெளிநடப்பு செய்து ஓட்டம் பிடித்தனர். 

ஆளுநர் உரையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசியல் எந்திரங்களையும் திறம்பட ஒருங்கிணைத்து செயல்பட்ட பெருமை முதலமைச்சரை சாரும். தக்க சமயத்தில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கையும் எடுத்தார்.

மேலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு வைக்கப்பட்டது. இதனால் அனைவருக்கும் உணவு கிடைத்தது.

சுகாதார அமைப்புகளை கட்டமைத்து, நோய் இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாதனைகள் அனைத்தும் முதலமைச்சரை சாரும். இவ்வாறு ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

Similar News