கொரோனா பரவலைத் தடுக்க மேலும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு.!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும், சில கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2021-04-24 08:00 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும், சில கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.


 



இருந்தபோதும் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்கிறது. பொதுமக்களிடம் போதுமான ஒத்துழைப்பு இல்லை என்பதால், தொற்று பரவல் மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தமிழகம் சார்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். இந்த ஆலோசனைக்கு பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலாளர், அரசின் ஆலோசகர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர்.




 


அப்போது, மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி கோவில் மற்றும் கடைகள் திறந்திருக்கும் நேரம் மேலும் குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்புகள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

காய்கறிச் சந்தைகள், பழச்சந்தைகளை திறந்தவெளியில் உள்ள திடலில் அமைப்பது பற்றியும் அறிவிப்பில் வெளியாகும் என கூறப்படுகிறது. இரவு 8 மணியுடன் கடைகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்க இபாஸ் முறை கட்டாயமாக்கப்படவும் வாய்ப்புள்ளது.

Similar News