சாதாரன அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்லலாமா.? சென்னை மாநகராட்சி ஆணையர் பரபரப்பு தகவல்..!

சாதாரன அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனை செல்வதால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Update: 2021-04-23 11:31 GMT

சாதாரன அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனை செல்வதால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: கடந்த ஆண்டை விட இந்த வருடம் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்.




 


அது போன்றவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். சாதாரன அறிகுறி தென்படுபவர்கள் குறைந்தது 10 நாட்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.


 



சாதாரனமாக உள்ளவர்கள் காய்ச்சல் குறித்து சோதனை செய்து கொள்ளுங்கள், மிகவும் அதிகமான காய்ச்சல் இருப்பவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News