சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.. இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர்.!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.. இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர்.!

Update: 2020-12-04 09:45 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னதாக மதுரையில் 1,450 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார்.


மேலும், சிவகங்கை மாவட்டத்தில் நிறைவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 7 ஆயிரத்து 557 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.


அந்த மாவட்டத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினரையும் முதலமைச்சர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக மதுரை மாவட்டத்தில் ரூ.1295 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News