கொரோனா தடுப்பு பணிகள்.. 3 மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு.!

கொரோனா தடுப்பு பணிகள்.. 3 மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு.!

Update: 2020-12-12 10:10 GMT

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். இது பற்றி மாவட்ட வாரியான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை தளர்த்தியுள்ளது. அதே சமயம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கும் அமலில் இருக்கும் எனவும் அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.

திருவாரூர், கடலூர், அரியலூர், தருமபுரி, சேலம், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் 16, 17-ம் தேதிகளில் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த மாவட்டங்களில் கொரோனா மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
 

Similar News