கல்லூரிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா நெறிமுறைகள்.!

கல்லூரிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா நெறிமுறைகள்.!

Update: 2020-12-05 18:53 GMT

வருகின்ற 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2ம் தேதி முதல் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது வருகின்ற 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மாணவர்களுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது: வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. உடனே தனிமைப்படுத்தப்படுவர். ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி உண்டு. நீச்சல் குளங்கள் உடனே மூடப்படனும்.
மாணவர்களை எக்காரணத்தை முன்னிட்டு சுற்றுலா அழைத்துசெல்ல அனுமதி இல்லை.


மாணவர்கள் முடிந்தவரை கல்லூரி அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் மற்றும் அதன் முதல்வர் மாணவர்கள் முறையாக கொரோனா நெறிமுறைகள் பின்பற்றுகிறார்களா என பார்க்க வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆரோக்ய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மாணவர்கள் முறையாக பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். அனைவரும் இதனை முறையாக பின்பற்றி கொரோனா இல்லாத தேசமாக மாற்ற சபதம் ஏற்போம்.
 

Similar News