எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்.!
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியிருப்பதாக மருத்துவத்துறை கூறியுள்ளது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகத்தில் தொடங்கியிருப்பதாக மருத்துவத்துறை கூறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் வேகமாக போடப்பட்டு வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக போடப்படுகிறது. சமீபத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என மருத்துவத்துறை கூறியுள்ளது.
அந்த வகையில், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முறையான மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.