பழனியில் தொடங்கிய கொரோனா தடுப்பூசி போடும் பணி.. தலைமை மருத்துவர் உதயகுமார் செலுத்திக்கொண்டார்.!

பழனியில் தொடங்கிய கொரோனா தடுப்பூசி போடும் பணி.. தலைமை மருத்துவர் உதயகுமார் செலுத்திக்கொண்டார்.!

Update: 2021-01-17 10:25 GMT

நாடு முழுவதும் நேற்று முதல் (16ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் பழனியில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல் தடுப்பூசியை பழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் செலுத்திக்கொண்டார். முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் இன்று முதல் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும்பணி துவங்கியது.

பழனியில் முதற்கட்ட தடுப்பு ஊசி செலுத்தும் பணி பழனி அரசு மருத்துவமனையில் துவங்கியது. முதல் தடுப்பூசியை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி முன்னிலையில்  பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் செலுத்திக் கொண்டார்.

அப்போது அவர்கள் கூறியதாவது: பழனி அரசு மருத்துவமைனையில் பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை தாலுகாக்களை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என 2536முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக 2800டோஸ் கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் வந்துள்ளதாகவும், முதல் நாளான இன்று 50பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அனைவருக்கும் செலுத்தப்படும் என்றும், 28நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Similar News