இன்று முதல் தொடங்குகிறது 24 மணி நேரம் கொரோனா தடுப்பூசி !

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்களுக்கு வேகமாக தடுப்பூசியை போட வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.;

Update: 2021-08-23 03:47 GMT

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும், கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருந்த போதிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் பொதுமக்களுக்கு வேகமாக தடுப்பூசியை போட வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படுகிறது.

Source, Image Courtesy: Topnews

https://www.toptamilnews.com/corona-vaccine-for-24-hours-from-today/

Tags:    

Similar News