6 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஷ்கள் தமிழகம் வந்தது.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து 6 லட்சம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கூடுதலாக 6 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்துள்ளது. விமானம் மூலம் சென்னைக்கு வந்த தடுப்பூசி மருந்துகளை தமிழக அரசு வாகனத்தில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.