தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.!
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆய்வை மேற்கொண்டதில் பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. இதனிடையே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஆய்வை மேற்கொண்டதில் பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்ட 26,917 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7,38,583 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.