45 வயதுள்ள அனைவருக்கும் 10 நாட்களில் தடுப்பூசி.. தமிழக அரசு உத்தரவு.!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10ம் தேதி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கோயில் திருவிழா, திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Update: 2021-04-15 13:07 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், தடுப்பூசி போடும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10ம் தேதி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கோயில் திருவிழா, திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி அனைத்து மாவட்டங்களிலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வருகின்ற 10 நாட்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Similar News