தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

Update: 2021-01-30 16:34 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி புதிதாக 509 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் வைரஸ் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. தற்போது வரை 4,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் உயிரிழப்புகளும் குறைந்து விட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது தெரியவருகிறது.

இதனிடையே கொரோனா தடுப்பூசி கடந்த 16ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதற்காக 150க்கும் அதிகமான பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலமாக அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News