18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி.. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!

Update: 2021-01-06 11:42 GMT

ஜனவரி 8ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய அடுத்த நாளே மக்களுக்கு தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. ஜனவரி 8ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்கும் வசதி மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது. 30 லட்சம் ஊசிகள் நாளை முதல் மாவட்டம் வாரியாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றார். மேலும், அவர் பேசியதாவது மத்திய அரசின் வழிகாட்டுதல் படி முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். பின்னர் முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் ஆலோசித்து தெரிவிப்பார்கள். அதன்பின்னரே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News