சென்னையில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி ஒத்திகை.!
சென்னையில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி ஒத்திகை.!;
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று ஜனவரி 2ம் தேதி கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அதன்படி கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று முதல் சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 17 இடங்களில் நடைபெறுகிறது.
இதற்காக 47 ஆயிரத்து 200 கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 21 ஆயிரத்து 170 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் தொடங்கியது.